விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

இத்தளத்தில் பதிவு செய்வதன்மூலம் கீழ்க்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன்.

1. நான் சமர்ப்பித்த (என்னால் சமர்ப்பிக்கப்பட்ட) அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் அவை அனைத்தும் என் சுயநினைவுடன் வழங்கப்பட்டவை. தகவல் ஏதேனும் தவறானதாகக் கண்டறியப்பட்டால், அதற்கான சட்ட விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

2. ஒரு குவாரியின் வரிசைக்குப் பதிவு செய்யப்பட்ட எனது லாரியை வரிசை நிறைவடையும் வரையில் வேறு குவாரிக்கோ அல்லது பதிவை ரத்து செய்யவோ முடியாது என்பதை நான் அறிவேன்.

3. எனது பதிவுச் சீட்டானது எனது மின்னஞ்சல் மற்றும் செல்லிடப்பேசி எண்ணிற்கு 30 மணி நேரத்திற்கு முன்னரே அனுப்பப்படும். அதுவரையில் காத்திருப்பு நேரம் என்பது தோராயமானதே என்பதை நான் அறிவேன்.

4. எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் அன்றே லாரியைக் கொண்டுவரவேண்டும். ரகசிய குறியீட்டுடனான முன்பதிவு ரசீது பெறும் வரை நான் அல்லது ஓட்டுனர் லாரியுடன் குவாரியில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் அறிவேன்.

5. குவாரி உற்பத்தி நிறுத்தம் ஏற்படும் தருவாயில், காத்திருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் ஆகியவை தானாகவே ரத்து செய்யப்படும், மேலும் லாரிகளை மற்றொரு குவாரியில் பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

6. மணல் எடுக்க வரும் தருணத்தில் ஒட்டுனர் மது அருந்தி இருந்தாலோ அல்லது லாரியின் பதிவு எண் முன்பதிவு சீட்டில் உள்ள எண்ணுடன் பொருந்தாவிட்டாலோ பதிவு ரத்து செய்யப்பட்டு கண்டிப்பாக மணல் வழங்கப்படமாட்டாது. இதே நிகழ்வு தொடர்ந்தால் லாரி தடை செய்யப்பட்ட லாரிகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை நான் அறிவேன்.

7. லாரியின் முன்பதிவுகளும் உறுதிசெய்யப்பட்ட பதிவுகளும், தொழில்நுட்ப அல்லது எதிர்பாராத சூழ்நிலை காரணத்தினால் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம். அவ்வாறு ரத்து செய்யும் பட்சத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு TNsand பொறுப்பேற்காது. லாரி முன்பதிவு செய்யப்பட்டதாலோ உறுதிசெய்யப்பட்டதாலோ மணல் கண்டிப்பாக வழங்கப்படும் என்பது நிச்சயம் இல்லை.